பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில் தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும், இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.
Attachments area
Preview YouTube video Sri Lanka’s Economic Crisis,, Commonwealth Leaders In Kigali + More | Channels Business Global
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+ + +1-614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Article originally published on www.einpresswire.com as பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா – இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
More Stories
Ukraine accused of missile attack on Russian city – BBC News
Europe’s REARMING to defend itself against RUSSIA: A new era for the EU? – VisualPolitik EN
The World Ahead 2022: five stories to watch out for | The Economist